வழிகாட்டும் வள்ளுவம்- பத்ஹுர் ரப்பானி; பக்.146; ரூ.180; செய்யத் ஹோம் பப்ளிஷர்ஸ், திருநெல்வேலி- 627 003; ✆ 0462 2502486.
உலக மக்களுக்கு ஒழுக்கத்தையும் வாழ்வை வளப்படுத்தும் வழிமுறைகளையும் எடுத்துரைக்கும் திருக்குறளில் முக்கிய குறள்களை மேற்கோளிட்டு, இன்றைய வாழ்வில் வளமுடனும், நலமுடனும், பிரச்னையின்றி வாழ்வதற்கான அரிய கருத்துகளாக 15 கட்டுரைகள் உள்ளன.
அன்பு, சூது, கற்றல், நீர், ஒழுக்கம், நாவை அடக்குதல், தந்தை- மகன் உறவு, நன்றி, துன்பம், மனம், அறிவு, நீங்கு, தனி மனித நடத்தை, மெய்ப்பொருள், முயற்சி போன்றவை தொடர்பான இந்தக் கட்டுரைகள் அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அணுகி தீர்வைக் காணவும், வழிகாட்டவும் உதவும்.
கட்டுரைகளில் திருக்குர்ஆன், திருமந்திரம், கொரிந்தியர், நீதி நூல், ஆசாரக் கோவை, புதிய கோணங்கி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, புறநானூறு, நாலடியார், இப்னு மாஜா, மிஷ்காத், விவேக சிந்தாமணி, திரிகடுகம், பாரதியார் கவிதை, பாரதிதாசன் கவிதை தொகுதி, பழமொழி, புகாரி, ஏலாதி, இன்னா நாற்பது, நான்மணிக்கடிகை, வளையாபதி, கீதை, மூதுரை, சீவக சிந்தாமணி, தொல்காப்பியம் உள்ளிட்ட முக்கிய நூல்களின் வரிகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இதுதவிர, தலைசிறந்த அறிஞர்களின் பொன்மொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
உறவுகள், நட்புகள், வாழ்க்கைச் சூழல் என்று பல பிரச்னைகளில் இருப்போர் வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை எடுத்துரைக்கும் வகையில், உயர்வதற்கான வழிகளும், பிரச்னைகளை எளிதில் சமாளித்து கடந்துபோவதற்கான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
எண்ணம்போல் வாழ்க்கை- தூய எண்ணங்களை விதைத்துக் கொண்டு, தீய எண்ணங்களை விலக்கி வாழ்வதற்கான வழிமுறைகளை இந்த நூல் விளக்குகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











