போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புத்தரின் தம்மபதம் ஞான விளக்கம்

முதல் இயலான இரட்டை, மனித எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றின் இரட்டைத் தன்மையை விளக்குகிறது.

News image
Updated On :23 மார்ச் 2026, 12:14 pm

தினமணி செய்திச் சேவை

புத்தரின் தம்மபதம் ஞான விளக்கம் - ப. சரவணன்; பக். 448; ரூ. 520; சுவாசம் பதிப்பகம், சென்னை-600 127; ✆ 81480 66645.

புத்தரின் தம்ம பதத்துக்கு உலகில் இதுவரை எண்ணற்ற மொழிகளில், எண்ணற்ற ஆய்வுரைகள் வந்திருக்கின்றன. ஒவ்வொரு வாசிப்பின்போதும் புதிய அனுபவங்களை, உணர்தலைத் தருபவை தம்மத்தின் வரிகள்.

புத்தரின் போதனைகள்தான் தம்மம். பல நூற்றாண்டுகளாக வாய்மொழியாக இருந்துவந்த தம்ம பதம், பின்னாளில் பாலி மொழியில் திரிபிடகமாக எழுத்து வடிவம் பெற்றது. மொத்தம் 26 அத்தியாயங்களையும் 423 வசனங்களையும் கொண்டது புத்தரின் வசனங்களின் தொகுப்பான தம்மத்தின் பாதை அல்லது சத்தியத்தின் பாதை எனப்படும் தம்ம பதம். தமிழில் அம்பேத்கர், ஆச்சார்ய ரஜ்னீஷ், பெரியார்தாசன் எனப் பலரின் தம்ம உரைகள் வெளிவந்திருக்கின்றன.

இந்த விளக்க நூலில் தம்மத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் பற்றியும் விரிவான அறிமுகத்தையும் விளக்கத்தையும் ஆசிரியர் சரவணன் தருகிறார். தொடர்ந்து, புத்தரின் வசனங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு எளிய தமிழில் விளக்குகிறார்.

முதல் இயலான இரட்டை, மனித எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றின் இரட்டைத் தன்மையை விளக்குகிறது. மனம் என்ற இயல் ஆழ்ந்து வாசித்துணர வேண்டியது. 'மனம்தான் எல்லாம். நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்' என்கிறது தம்மம்.

ஞானத்தை எட்டிய ஒருவரின் குணங்களை விவரிக்கும் முழுமை, பெüத்தத்தில் முழுமையடைந்தவர் யார் என்பதற்கான அடையாளங்களைச் சுட்டுகிறது. ஆயிரம் பற்றிய இயலில், ஆயிரம் பயனற்ற வார்த்தைகளைவிட, பேச்சுகளைவிட ஒரு பயனுள்ள வார்த்தை சிறந்தது என்கிறார் புத்தர்.

செயல், சொல், எண்ணம் ஆகிய மூன்றிலும் தீமை செய்யாதவனை நான் புனிதன் என்கிறேன் (தம்மம் 26.9). இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் எத்தனை செயற்கை நுண்ணறிவுகள் தோன்றினாலும் மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் ஒழுக்கமாகவும் வாழ விரும்புவோருக்கான வழி புத்தரின் போதனைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.