சாகித்திய அகாதெமி விருதாளர்களின் படைப்பும் பார்வையும்
சாகித்திய அகாதெமி படைப்புகளை இதுவரை வாசிக்காதவர்களுக்கு ஓர் அறிமுகமாகவும், வாசித்தவர்களுக்கு ஆய்வுக் கோவையாகவும் திகழ்கிறது இந்த நூல்.


சாகித்திய அகாதெமி விருதாளர்களின் படைப்பும் பார்வையும்; தொகுப்பும் பதிப்பும் முனைவர் ப.முருகன்; பக். 344; ரூ.350; வெளியீடு- தமிழ்த் துறை, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை-600106.
1955 முதல் 2024 வரை சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ப் படைப்புகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் தொடங்கி ஸ்ரீராமாநுஜன் வரையிலான 27 நூல்கள் குறித்து அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
நாட்டின் விடுதலையில் வ.உ.சி.யின் புரட்சிகரமான செயல்பாடு எவ்வாறு பங்காற்றியது என்பதை ஆ.இரா.வேங்கடாசலபதி ஆராய்ந்து எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் நூலின் துணை கொண்டு விளக்கியுள்ளார் அதுதொடர்பான கட்டுரையின் ஆசிரியர்.
புனைகதை என்கிற நவீன வடிவத்தில் சிறுகதைக்கென்று தனி இடம் உண்டு. அந்த வகையில் வண்ணதாசனின் 'ஒரு சிறு இசை' சிறுகதைத் தொகுப்பை ஆய்வு செய்கிறது 'அன்பின் ஆயிரம் கரங்களை மொழியால் வரைந்த கதைஞன்' கட்டுரை.
தீபம் நா.பார்த்தசாரதியின் 'சமுதாய வீதி' நாவல் குறித்த கட்டுரையின் நிறைவாக, 'சமுதாய நியாயங்களைக் காப்பாற்றும் அரும் பொறுப்பு எழுத்தாளனிடமும் இருக்கிறது' எனக் கூறியிருப்பது நா.பா.வின் கதைமாந்தர்களான முத்துக்குமரன், கோபால், மாதவிக்கு பெருமை சேர்க்கிறது.
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, இலக்கியத்திற்கு ஓர் இயக்கம், அகல்விளக்கு, காலாபாணி, வேரில் பழுத்த பலா, பிசிராந்தையார், புதிய உரைநடை, கள்ளிக்காட்டு இதிகாசம், சூடிய பூ சூடற்க, சஞ்சாரம் உள்ளிட்ட நூல்கள் தொடர்பான கட்டுரைகள் மீள்பார்வையை அளிக்கின்றன.
சாகித்திய அகாதெமி படைப்புகளை இதுவரை வாசிக்காதவர்களுக்கு ஓர் அறிமுகமாகவும், வாசித்தவர்களுக்கு ஆய்வுக் கோவையாகவும் திகழ்கிறது இந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...