அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பலூசிஸ்தான்

பலூசிஸ்தானில் சாந்தியும் சமாதானமும் எப்போது உண்டாகும் என்ற கேள்வியை வலுவாக முன்வைக்கிறது இந்நூல்.

News image
Updated On :30 மார்ச் 2026, 7:06 pm IST

பலூசிஸ்தான் (மறுக்கப்பட்ட போரும் கைவிடப்பட்ட மக்களும்)- சுஷாந்த் சரீன்; தமிழில்: பி.ஆர். மகாதேவன்; பக். 160; ரூ. 200; கிழக்கு பதிப்பகம், சென்னை-600 014, ✆ 044-4200 9603.

1948-இல் தொடங்கி இன்னும் முடியாமல் தொடரும் பலூசிஸ்தான் சுதந்திரப் போராட்டம் இந்நூலில் தரவுகளுடன் தொகுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசின் அரசியல் நிகழ்வுகள் ஊடாக, அரச பயங்கரவாதத்துக்கு உள்ளாகும் பலூச் மக்களின் அவல நிலையை வெளிச்சம் போடுகிறது இந்நூல்.

தமது பிராந்தியம் பாகிஸ்தான் அரசால் சரியாக நடத்தப்படாததைக் கண்டித்து இதுவரை நான்கு முறை பெரும் கலகங்கள் நடந்திருக்கின்றன. புதிய தலைமுறையின் விழிப்புணர்வு ஐந்தாம் கிளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. ஆனாலும், பாகிஸ்தான் அரசின் மனித உரிமை விரோதச் செயல்கள் தொடர்கின்றன. பலூச் மக்களின் போராட்டமும் தொடர்கின்றன.

வரலாற்று ரீதியாக முன்பொரு காலத்தில் இந்தியாவின் அங்கமாக இருந்த பலூசிஸ்தானில், இப்போது நிகழ்த்தப்படும் துயரங்களைத் துடைக்கும் தார்மிகப் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.

வன்முறைத் தாண்டவம் ஆடும் பாகிஸ்தானின் கைகளால், தங்களுடைய தலைவிதி எழுதப்படுவதை விரும்பாத பலூச் மக்கள், தம் உள்ளார்ந்த சுதந்திர உணர்வுகளின் அடிப்படையில் இதுவரை செய்தது சரிதான் என்பதைத்தான் கடந்த 70 ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

பலூசிஸ்தானில் சாந்தியும் சமாதானமும் எப்போது உண்டாகும் என்ற கேள்வியை வலுவாக முன்வைக்கிறது இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.