பச்சை மஞ்சள் சிகப்பு
ரயில்கள் இயக்கப்படுவதன் பின்னணியில் நடைபெறுகிற ஒவ்வொன்றையும் கதையோடு கதையாக விவரித்து எழுதப்பட்ட இந்த நாவலை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் குறிஞ்சிவேலன்.


பச்சை மஞ்சள் சிகப்பு-ட்டி.டி.ராமகிருஷ்ணன்; தமிழில்: குறிஞ்சிவேலன்; பக். 400; ரூ. 450; அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி-642 003, ✆ 99761 44451.
ரயில்கள் இயக்கப்படுவதன் பின்னணியில் நடைபெறுகிற ஒவ்வொன்றையும் கதையோடு கதையாக விவரித்து எழுதப்பட்ட இந்த நாவலை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் குறிஞ்சிவேலன்.
1995-இல் 52 பேர் உயிரிழக்கக் காரணமான, சேலம் அருகே லோக்கூர்- டேனிஷ்பேட்டை இடையே ஒரே தடத்தில் விடப்பட்டு விரைவு ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்துதான் நாவலின் மையப்புள்ளி.
விபத்துக்கான காரணத்தை, பின்புலத்தை விபத்தில் தொடர்புடைய சிலர் தேடிச் செல்வதுதான் கதை. நாவலாக எழுதப்பட்டிருந்தாலும் இவற்றில் உண்மைகளும் இடம் பெற்றிருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.
சுயநலக் கும்பல்களின் அதிகார ஆசையாலும், பணப் பேராசைகளாலும், பெரு நிறுவனங்களின் லாப நோக்கங்களாலும் அரசு நிறுவனங்களுக்குள் அவை ஆடும் ஆட்டங்களாலும் இவர்களுடைய லாப நோக்கத்தின் முன் மக்களின் உயிர்கள் எல்லாம் மிகவும் மலிவானவை என்பது நாவலில் வெளிப்படுத்தப்படுகிறது.
ஐஏஎஸ், ஐபிஎஸ்ûஸ தவிர்த்து ஐஆர்எஸ் பணிக்கு வரும் அரவிந்த்தும், பத்திரிகையாளர் ஜுவாலாவுமாக தேடிச் செல்கிறவை விறுவிறுப்பானவை.
'ரயில்கள் மோதிக்கொள்வதைத் தடுப்பதற்கான சாதனங்களை வைப்பதற்கான தேவையை இங்குள்ள ஆட்சியாளர்களோ, ரயில்வே போர்டோ இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை. அதை உணர வைக்க இங்கு மிகப் பெரும் விபத்துகள் ஏற்பட வேண்டும்' என்கிறார் ஸண்ணி என்பவர்.
பின்னுரையில் வந்தே பாரத் ரயில்களுடன் ஒடிஸô பாலúஸôர் ரயில் விபத்தைப் பற்றிய கவலையையும் பதிவு செய்திருக்கிறார் ராமகிருஷ்ணன்; ரயில்வேயில் உயர் அலுவலராகப் பணியாற்றியவர் என்பதால் ரயில்கள் இயக்கம் தொடர்பான ஏராளமான தொழில்நுட்ப விவரங்களும் நாவலில் இடம் பெற்றிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...