அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

ஏழைகளின் இறைவன் எம்.ஜி.ஆர்

அந்த வாசிக்காத பக்கங்கள் சிலவற்றின் தொகுப்பாக வந்திருக்கிறது இந்நூல்!

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

ஏழைகளின் இறைவன் எம்.ஜி.ஆர்.- விராலிமலை க. நாகராஜன்; பக். 122; ரூ. 120; சத்யா என்டர்பிரைசர்சஸ், சென்னை-600 094; ✆ 044-4507 4203.

இலங்கையில் பிறந்து தமிழகத்தில் சரித்திர புருஷராக மாறியவரின் வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். 'வாத்தியார்' என்றும் 'தலைவர்' என்றும் அழைக்கப்படுகிறார் ஒருவர்; அவர் வாழ்க்கை முழுவதும் திட்டமிட்ட பாதையில் உறுதியாக பயணம் செய்கிறது. வெற்றிகளைக் குவிக்கிறார்.

எம்ஜிஆரின் வாழ்க்கையை வெகு சுருக்கமாகவும் அவரை மையமாக வைத்து நிகழ்ந்த சம்பவங்களை எடுத்துக் காட்டுகிறது இந்த நூல். வறுமையில் வாடியபோதும் கூட பத்து ரூபாய் ஊதியம் பெற்று திரும்பியபோது அதில் இரண்டு ரூபாயை தர்மம் செய்து விட்டு வீடு திரும்பிய குணம் கொண்டவர் எம்ஜிஆர் என்கிற தகவல் வியப்பை அளிக்கிறது.

நுணுக்கமான நெகிழ்வான உணர்வுகளைப் பிரதிபலிக்காத தன்மை கொண்ட 'மெட்டாலிக்' முகம் என்று விமர்சித்து பலர் வாய்ப்பு தராமல் நிராகரிக்கப்படுகிறார்; அன்று நிராகரிக்கப்பட்ட அந்த முகத்தைத்தான் 'தம்பி நீ கோடிகளைத் தர வேண்டாம்; உன் திருமுகத்தைக் காட்டினால் போதும், வாக்குகள் கழகத்துக்கு வந்து சேரும்' என்று கூறி பெருமைப்படுத்துகிறார் அண்ணாதுரை. இந்த அதிசயத்தை நடத்திக்காட்டியவர் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் என்கிற மூன்றெழுத்து மந்திரத்தின் மீது ஒவ்வொருவரும் வைத்திருந்த நம்பிக்கையும், அதன்பால் அவர்களுக்குக் கிடைத்த உயர்வும் பிரமிக்க வைக்கின்றன.

எம்ஜிஆர் என்கிற எண்ணிலடங்காத பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தின் வாசிக்காத பக்கங்கள் இன்னும் எத்தனையோ இருக்கும்.

அந்த வாசிக்காத பக்கங்கள் சிலவற்றின் தொகுப்பாக வந்திருக்கிறது இந்நூல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.