குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

புதுச்சேரி கடற்கரைகள்

புதுச்சேரி என்றாலே பிரான்ஸ் கலாசார கட்டடங்கள் நினைவுக்கு வரும். அதே நேரத்தில் அதன் அழகிய கடற்கரையும், அதில் காலை, மாலையில் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியும் மிக முக்கியமானவை.

News image
Updated On :48 நிமிடங்கள் முன்பு

புதுச்சேரி கடற்கரைகள்- முனைவர் சி.எஸ். முருகேசன்; பக். 174; ரூ. 225; சங்கர் பதிப்பகம், சென்னை- 600 049, ✆ 94441 91256.

புதுச்சேரி என்றாலே பிரான்ஸ் கலாசார கட்டடங்கள் நினைவுக்கு வரும். அதே நேரத்தில் அதன் அழகிய கடற்கரையும், அதில் காலை, மாலையில் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியும் மிக முக்கியமானவை.

இயற்கையாக அமைந்த பிரதான கடற்கரையுடன் நவீன வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட கடற்கரைகள் தற்போது புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாக அமைந்துள்ளன. புதுச்சேரி கடற்கரைகளின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த நூலில் 18 தலைப்புகளில் எழுதப்பட்டிருப்பது சிறப்பானது.

புதுச்சேரியில் பிரதான கடற்கரைக்கு உலக அளவில் 2-ஆவது சிறப்பிடம் வழங்கப்பட்டிருப்பதையும், அதன் சிறப்பம்சத்தையும் நூலின் மூன்றாவது கட்டுரையில் நூலாசிரியர் விவரித்துள்ளார்.

புதுச்சேரியின் கடற்கரைகளை பாரம்பரியமானதாகவும், புதிய சீரமைக்கப்பட்டவையாகவும், இயற்கையான சூழலில் இன்றும் மாறாமல் அமைந்தவையாகவும் வகைப்படுத்திய நூலாசிரியர் அதில் 11 கடற்கரைகளை பட்டியலிட்டு அவற்றின் சிறப்பை விவரித்திருப்பது பாராட்டுக்குரியது.

கடற்கரைகளை பட்டியலிட்டிருப்பதுடன், அங்கு செல்வோருக்கான வழிகள், வாகன நிறுத்துமிடங்கள், உணவகங்கள் என சுற்றுலாப் பயணிகள் அறியவேண்டிய அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன. பாரடைஸ் கடற்கரைக்குச் செல்ல படகு வசதி, அதில் பயணிக்கும் முறை என நூலில் வழிகாட்டும் விவரங்கள் ஏராளம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.