/

பெரம்பலூர், அரியலூரில் 23 பள்ளிகளை மூட உத்தரவு

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 23 பள்ளிகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Updated On :12 ஜூன் 2013, 12:22 pm IST

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 23 பள்ளிகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
 இதுகுறித்து பெரம்பலூர் ஆட்சியர் தரேஸ் அஹமது செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 பெரம்பலூரில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமையில், 8 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டது.
 இந்த ஆய்வுகளில் பள்ளிகளில் கட்டட உரிமைச் சான்று, கட்டட உறுதிச் சான்று, சுகாதார சான்று, தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்று பெற்றுள்ளனரா, பள்ளியின் கழிப்பிட, குடிநீர், இட வசதி, விளையாட்டு திடல், போதுமான இருப்பிட வசதி உள்ளதா என்று அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டது.
 அதனடிப்படையில், பெரம்பலூர் வட்டாரத்திற்குள்பட்ட பெரம்பலூர் - எளம்பலூர் சாலையில் செயல்பட்டு வரும் ரோஸ் கிட்ஸ் கார்டன் நர்சரி பள்ளி, ஆத்தூர் சாலையில் செயல்பட்டு வரும் சக்ஸஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சாமியப்பா நகரில் செயல்பட்டு வரும் கலீல் மழலையர் பள்ளி, சென்னை பிரதான சாலையில் உள்ள இந்திரா நகர் தண்ணீர் பந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் நர்சரி மற்றும் தொடக்கபள்ளி, பெரம்பலூர் பர்ஸ்ட் ஸ்கூல் மழலையர் பள்ளி, ஆலத்தூர் வட்டாரத்திற்குள்பட்ட மேலமாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ரவி மழலையர் மற்றும் தொடக்கபள்ளி, இரூர் பகுதியில் செயல்பட்டு வரும் சரஸ்வதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, செட்டிக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீராமகிருஷ்ணா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, வேப்பூர் வட்டாரத்திற்குள்பட்ட ஆய்க்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் சத்தியபாமா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய 9 பள்ளிகள் அரசின் வழிகாட்டுதலின்படி தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்கள் பெறாததாலும், தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் மேற்கண்ட 9 பள்ளிகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளன என்றார் அவர்.
 அரியலூரில் 14 பள்ளிகளை மூட உத்தரவு:
 அரியலூர் மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 அரியலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையின் அனுமதி பெறாமல் செயல்படும், ஆண்டிமடம் ஒன்றியம் விளந்தை அம்மா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, உடையார்பாளையம் வட்டம் ஜயங்கொண்டம் ஆர்.சி. பாத்திமா மழலையர் பள்ளி, உட்கோட்டை யுத்தபள்ளம் நேரு மழலையர் தொடக்கப்பள்ளி, உடையார்பாளையம காமராசர் அறக்கட்டளை மழலையர் தொடக்கப்பள்ளி, தா.பழூர் மதிநிலா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, அரங்கராயநல்லூர் அருகே உள்ள சிலால் மதுரா மழலையர் தொடக்கப்பள்ளி, இருகையூர் மகாகவி பாரதி ஷேசாலயா மழலையர் தொடக்கப்பள்ளி, தவுத்தாய் குளம் திருச்சி பிரதான சாலையில் உள்ள விஜயதாரணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, இரும்புலிக்குறிச்சி குறிஞ்சி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, செந்துறை தாகூர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, வாரணவாசி அன்னை இந்திரா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, காமரசவல்லி பாரதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, வெற்றியூர் முத்துலட்சுமி மழலையர் தொடக்கப்பள்ளி, காமரசவல்லி விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 14 பள்ளிகள் ஒப்புதலின்றி செயல்பட்ட காரணத்தால், ஏற்கனவே இரண்டு முறை காரணங்காட்டும் அறிவிப்பு வெளியிட்டும், 31.5.2013-க்குள் உரிய ஆணை பெறாத நிலையில் மேற்கண்ட பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை உடனடியாக அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க தொடக்கக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.