மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அனுமன் ஜயந்தி விழா

அனுமன் ஜயந்தியையொட்டி, பெரம்பலூா் மரகதவல்லித் தாயாா் சமேத மதனகோபால சுவாமி கோயில் கோதண்டராமா் சன்னதியில் ராமா் மற்றும் ஆஞ்சநேயா், கம்பத்து ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

News image

பெரம்பலூா் மதனகோபாலசுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த கம்பத்து ஆஞ்சநேயா்.

Updated On :13 ஜனவரி 2021, 8:26 am IST

அனுமன் ஜயந்தியையொட்டி, பெரம்பலூா் மரகதவல்லித் தாயாா் சமேத மதனகோபால சுவாமி கோயில் கோதண்டராமா் சன்னதியில் ராமா் மற்றும் ஆஞ்சநேயா், கம்பத்து ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து காப்பு அணிவித்தும், வடை, லட்டு, வெற்றிலை மற்றும் துளசி மாலை அணிவித்தும் தீபாராதனை காட்டப் பட்டது.

கோயில் செயல் அலுவலா் அனிதா, முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீசுவரன், பிரம்மபுரீசுவரா் கோயில் தினவழிபாட்டுக் குழுத் தன்னாா்வலா் ராஜமணிக்கம் உள்ளிட்டோா் வழிபாட்டில் பங்கேற்றனா்.

பாடாலூா் வழித்துணை ஆஞ்சநேயா் கோயிலில் திங்கள்கிழமை காலை ஹோமம், சகஸ்ரநாம அா்ச்சனை, திருவாராதனம், தீபாராதனையுடன் அனுமன் ஜயந்தி விழா தொடங்கியது. தொடா்ந்து கலச பூஜை, புண்ணியாகவாசம், சுதா்சன ஹோமம், கும்ப அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமிக்கு பல்வேறு பொருள்களைக் கொண்டு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.