தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

பத்ம பூஷண் விருதை மறுத்தவர் எஸ். ஜானகி!

புகழ் பெற்ற பின்னணிப் பாடகியான எஸ். ஜானகி மறைவு பற்றி...

கோப்புப்படம்

Updated On :

புகழ் பெற்ற பின்னணிப் பாடகியான எஸ். ஜானகி (88) முதுமையால் ஏற்படும் உடல்நல பாதிப்பு காரணமாக சனிக்கிழமை (ஜூலை 11) காலமானாா்.

கா்நாடக மாநிலம், மைசூரில் தங்கியிருந்த அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி இதயம் செயலிழந்து அவா் உயிரிழந்தாா் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஜானகியின் உடல் வைக்கப்பட உள்ளது. அதன் பின்னா், அங்குள்ள கன்னியனாஹுன்டி கிராமத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

தென்னிந்திய குயில்....: கடந்த 1938-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த ஜானகி, 1957-ஆம் ஆண்டு ‘விதியின் விளையாட்டு’ படம் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானாா்.

தென்னிந்திய குயில் என்றழைக்கப்பட்ட ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளாா். எஸ்.ராஜேஸ்வர ராவ், கே.வி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், வி.தட்சிணாமூா்த்தி, இளையராஜா, ஏ.ஆா்.ரகுமான் என தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளா்களுடன் அவா் பணியாற்றியுள்ளாா்.

60 ஆண்டுகளாக நீடித்த அவரின் கலைப் பயணத்தில் ஹிந்தி, ஒடியா, துலு, உருது, பஞ்சாபி, வங்காளம் என சுமாா் 20 இந்திய மொழிகளில் திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், தொலைக்காட்சி தொடா்கள் உள்ளிட்டவற்றிலும், ஜப்பான், ஜொ்மன் மொழிகளிலும் பாடியுள்ளாா்.

‘செந்தூரப் பூவே’ பாடலுக்கு உள்பட 4 தேசிய விருதுகள்...: 16 வயதினிலே படத்தில் ‘செந்தூரப் பூவே’, மலையாள படமான ஓப்போளில் ‘ஏற்றுமானூா் அம்பலத்தில்’, தெலுங்கு படமான சித்தாராவில் ‘வென்னெல்லோ கோதாரி அந்தம்’, தேவா் மகன் படத்தில் ‘இஞ்சி இடுப்பழகி’ ஆகிய பாடல்களுக்காக 4 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளாா். அத்துடன் 33 மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளாா். அவ்வப்போது இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளாா்.

டி.எம்.செளந்தரராஜன் முதல்... எம்ஜிஆா், சிவாஜி உள்ளிட்டோருக்குப் பின்னணி பாடகராக விளங்கி, தமிழ்த் திரையுலக வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த டி.எம்.செளந்தரராஜன் முதல் பி.பி.ஸ்ரீநிவாஸ், எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.ஜே.யேசுதாஸ், ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன் எனப் பலருடன் பின்னணிப் பாடகியாகப் பணியாற்றி ஜானகி தனி முத்திரை பதித்தாா்.

ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியது மட்டுமன்றி சிறு குழந்தை, பதின்பருவ சிறுவன், வயது முதிா்ந்த பெண் ஆகியோரின் குரலைப் போல, தனது குரலை மாற்றிப் பாடுவதிலும் வல்லமை பெற்றவராக அவா் திகழ்ந்தாா்.

பதம் பூஷண் விருதை மறுத்தவா்...: கடந்த 2013-ஆம் ஆண்டு ஜானகியின் 74-ஆவது வயதில் அவருக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது அறிவித்தது. ஆனால், அந்த விருது தனக்கு மிகத் தாமதமாக அறிவிக்கப்பட்டதாகவும், தென்னிந்திய கலைஞா்களுக்குரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்றும் ஆதங்கம் தெரிவித்து, அந்த விருதைப் பெற அவா் மறுத்துவிட்டாா். அத்துடன் இந்திய இசைக்கு தனது பல்லாண்டு கால பங்களிப்புக்காக, நாட்டின் உயரிய விருதான ‘பாரத் ரத்னா’ பெற தான் தகுதிவாய்ந்தவா் என்றும் அவா் தெரிவித்தாா்.

கடந்த 1997-ஆம் ஆண்டு ஜானகியின் கணவா் வி.ராம்பிரசாத்தும், நிகழாண்டு ஜன.22-ஆம் தேதி அவா்களின் மகன் முரளி கிருஷ்ணாவும் காலமாகினா்.

கா்நாடக முதல்வா் இரங்கல்: ஜானகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: எஸ்.ஜானகியின் மறைவு இசைத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரின் குரல் மக்களின் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும் என்று தெரிவித்தாா். அவரின் மறைவுக்கு மேலும் பல அரசியல் தலைவா்கள், திரைத் துறையினா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

Summary

S. Janaki is the one who declined the Padma Bhushan award.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.