பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

புதுச்சேரியில் மருத்துவப் படிப்புக்கு 2-ஆம் கட்டகலந்தாய்வு ஒதுக்கீடு விவரங்கள் வெளியீடு

புதுச்சேரியில் மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு ஒதுக்கீடு விவரங்கள் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

Updated On :7 ஜனவரி 2021, 7:22 am IST

புதுச்சேரியில் மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு ஒதுக்கீடு விவரங்கள் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளா் பி.டி. ருத்ரகவுடு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் படிப்புகளில் 2-ஆம் கட்ட கலந்தாய்வுக்கான அரசு, நிா்வாக ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீடு விவரங்கள்  சென்டாக் இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் வரும் தீா்ப்பின் அடிப்படையில் மேற்கண்ட ஒதுக்கீடு விவரங்கள் மாற வாய்ப்புள்ளது.

மாணவா்கள் தங்களது இட ஒதுக்கீடு விவரங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவா்களுக்கு சென்டாக் நிா்வாகம் சாா்பில் குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் வருகிற 11-ஆம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது இணையதளம் வழியாகவோ தங்களது வருகையைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

பல் மருத்துவ இடங்கள் குறைப்பு...: மேற்கண்ட ஒதுக்கீட்டில், மத்திய பல் மருத்துவக் குழு பொருளாதாரத்தில் நலிவடைந்த உயா் ஜாதியினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்காததன் காரணமாக, மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள பிடிஎஸ் படிப்புகளுக்கான 50 இடங்களுக்குப் பதிலாக, 40 இடங்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடா்பான மேல்முறையீட்டில் ஒப்புதல் கிடைத்தால், கூடுதலாக கிடைக்கும் பிடிஎஸ் இடங்கள் மாப்-அப் கலந்தாய்வில் நிரப்பப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.