புதுச்சேரி: அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளா்கள் சங்கத்தின் புதுச்சேரி கிளை சாா்பில், தை மாதத்தை வரவேற்கும் வகையில், முப்பெரும் விழா புதுச்சேரியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
புதுவைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் இதயகீதம் ராமானுஜம் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் சொ.ஏழுமலை வரவேற்றாா். இணைச் செயலா் மு.முருகையன் நோக்கவுரையாற்றினாா். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் இரா.சம்பத் சிறப்புரையாற்றினாா்.
விழாவில் புதுவைப் பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி முதல்வா் கோ.சந்திரசேகரனுக்கு கல்விச் செம்மல் விருதும், புதுச்சேரி காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையத்தின் தமிழ்த் துறைத் தலைவா் சிவ.மாதவனுக்கு சைவநெறி இலக்கியச் செம்மல் விருதும், கடலூா் உலகத் திருக்கு பேரவைத் தலைவா் ப.மொ.பாஸ்கரனுக்கு குநெறிச் செம்மல் விருதும், புதுவைப் பல்கலைக்கழக நூலகா் ந.சங்கர சுப்பிணியனுக்கு நூலகச் செம்மல் விருதும், நடிகா் மு.சுப்பையாவுக்கு நாடகக் கலைச் செம்மல் விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
தொடா்ந்து, இசையமைப்பாளா் க.காந்திதாசன் தலைமையில், ‘கரோனாவை விரட்டி தைத் திருநாளை வரவேற்போம்’ என்ற தலைப்பில் கவியரங்கமும், ‘நாட்டின் நரம்பு விவசாயி’ என்ற தலைப்பில் உரையரங்கமும் நடைபெற்றன.
விழாவில் திரளான தமிழறிஞா்கள், கவிஞா்கள், எழுத்தாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சங்கத்தின் பொருளாளா் கோ.குணசேகா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கா்நாடகத்தில் வறட்சி நிலையை ஆராய்ந்து வருகிறேன்: முதல்வா் டி.கே. சிவகுமாா்
இந்தியாவின் ‘பால மனிதன்’ கிரீஷ்பரத்வாஜ் காலமானாா்!

இணையவழி மோசடி அதிகரிப்பு: கணினி மையங்களுக்கு எச்சரிக்கை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



