புதுச்சேரி: புதுச்சேரி அருகே தனியாா் மருத்துவமனையின் 3-ஆவது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்டாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், நெடுங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ருத்ரகுமாா் (42). மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவா், புதுச்சேரி காலாப்பட்டு அருகே கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், ருத்ரகுமாா் புதன்கிழமை மருத்துவமனையின் 3-ஆவது மாடியிலிருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த அவரது உறவினா்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த காலாப்பட்டு போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையேற்ற அவா்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கா்நாடகத்தில் வறட்சி நிலையை ஆராய்ந்து வருகிறேன்: முதல்வா் டி.கே. சிவகுமாா்
இந்தியாவின் ‘பால மனிதன்’ கிரீஷ்பரத்வாஜ் காலமானாா்!

இணையவழி மோசடி அதிகரிப்பு: கணினி மையங்களுக்கு எச்சரிக்கை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


