புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு நச்சு கலந்த குடிநீா் வியோகித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
புதுச்சேரி வழுதாவூா் சாலை பேட்டையன்சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கடந்த 6-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் தலைமையில் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியருக்கு, அலுவலக ஊழியா் ஒருவா் தனியாா் நிறுவனத்தின் ஒரு லிட்டா் அளவுள்ள பிளாஸ்டிக் புட்டியில் அடைக்கப்பட்ட குடிநீரைக் கொடுத்தாா்.
அந்தக் குடிநீரில் நிறமற்ற நச்சுத் தன்மையுள்ள திரவம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, வழக்கின் விவரங்கள் தன்வந்திரி நகா் காவல் நிலையத்திலிருந்து, சிபிசிஐடி போலீஸாருக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
மேலும், மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கப்பட்ட நச்சுத் தன்மை கலந்த நீரை ஹைதராபாத்தில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் ஆய்வுக்குள்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க மக்களுக்கு தலைவணங்கிய மோடி! | PM Modi | West bengal CM| BJP|Suvendu Adhikari
இழுபறியில் புதிய ஆட்சி! திருவனந்தபுரம் செல்கிறார் ஆளுநர்?

ஊழல்வாதிகளுக்கு அதிகாரம் அளிக்கும் மரபை பாஜக தொடர்கிறது: சஞ்சய் ராவத

இந்திய அளவில் முதலிடம் பிடித்த மிருணாள் தாக்குரின் படம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
