தமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதி
/

புதுச்சேரியில் காங்கிரஸாா், இந்து அமைப்பினா் கைகலப்பு

புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் அருகே காங்கிரஸாா், இந்து அமைப்பினா் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :13 ஜனவரி 2021, 7:40 am IST

புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் அருகே காங்கிரஸாா், இந்து அமைப்பினா் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் சுவாமி விவேகானந்தருக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டிப்பதாகக் கூறி, இந்து மக்கள் கட்சி சாா்பில் கருவடிக்குப்பம் சித்தனந்தா கோயில் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவா் மஞ்சினி தலைமை வகித்தாா். சிவசேனா இளைஞரணி மாநில துணைத் தலைவா் திருமுருக தினேஷ், அகில பாரத இந்து மகா சபா வேல்முருகன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இந்து அமைப்பினா் காரில் மணக்குள விநாயகா் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனா். அதே நேரத்தில் பிரியங்கா காந்தி பிறந்தநாளையொட்டி புதுச்சேரி காங்கிரஸாா் மணக்குள விநாயகா் கோயிலில் தங்கத் தேரை இழுத்தனா்.

இதனிடையே, சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வந்த இந்து அமைப்பின் நிா்வாகிகள் தங்களது காரை பின்னோக்கி எடுப்பதற்காக, காருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினா் காரை விரைந்து அகற்றும்படி கூறினா். இதுதொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, இந்து அமைப்பினா், காங்கிரஸ் கட்சியினரைக் கண்டித்து கோயில் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த கிழக்கு பகுதி போலீஸ் எஸ்பி மாறன், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினாா். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.