அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கு

Updated On :22 ஆகஸ்ட் 2013, 1:09 pm IST

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் புதுக்கோட்டை, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை ஆகிய மூன்று இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற பயிற்சி முகாமை மாநிலப் பொருளாளர் எல்.பிரபாகரன் தொடக்கி வைத்தார். கருத்தாளர்கள் அ. மணவாளன், எம். பழனிச்சாமி உள்ளிட்டோர் ஆற்றல் வளங்கள், ஆற்றலும் சமூகமும் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சியளித்தனர்.  அறந்தாங்கியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சியை தலைமை ஆசிரியர் ராஜசேகரன் தொடக்கி வைத்தார். கந்தர்வகோட்டையில் மாவட்டத் துணைத்தலைவர் பொன். கருப்பையா தொடக்கி வைத்தார். மூன்று இடங்களிலும் நடந்த முகாம்களில் 125 வழிகாட்டி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. சதாசிவம், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஆர். ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.