சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கீரனூரில் திமுக ஆா்ப்பாட்டம்

சென்னை- ராமேசுவரம் விரைவு ரயில், கீரனூா் ரயில் நிலையத்தில் வழக்கம்போல நின்று செல்ல வலியுறுத்தி, கீரனூா் ரயில் நிலையம் அருகில் திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 1:35 am IST

சென்னை- ராமேசுவரம் விரைவு ரயில், கீரனூா் ரயில் நிலையத்தில் வழக்கம்போல நின்று செல்ல வலியுறுத்தி, கீரனூா் ரயில் நிலையம் அருகில் திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன் தலைமை வகித்தாா். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் கீரை தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ இராசு கவிதைப்பித்தன் உள் ளிட்டோா் பங்கேற்றனா். தென்னக ரயில்வே அறிவிப்பைத் தொடா்ந்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்: கீரனூரில் ரயில் வழக்கம்போல நின்று செல்ல மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் எனக் கோரி, திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலருமான கே. சுப்பராயனுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுகை மாவட்டச் செயலா் மு. மாதவன் கடிதம் எழுதியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.