சாலைப் பராமரிப்புப் பணிகளைத் தனியாருக்கு வழங்கக் கூடாது என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் 7ஆவது மாவட்ட மாநாட்டுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப. முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் கே. ராஜாராம், மாவட்டப் பொருளாளா் எம். பிரேம்குமாா் ஆகியோா் அறிக்கைகளை முன்வைத்துப் பேசினா். மாநிலப் பொதுச் செயலா் ஆ. அம்சராஜ், மாநிலச் செயலா் எஸ். மகேந்திரன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி, மாவட்டத் தலைவா் எஸ். ஜபருல்லா உள்ளிட்டோா் பேசினா்.
மாநாட்டில், சாலைப் பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு விடுவதைக் கைவிட்டுவிட்டு, நெடுஞ்சாலைத் துறையே நேரடியாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலைப் பணியாளா்களின் 14 மாதப் பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். வாரிசுகளுக்கு கருணை வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், சங்கத்தின் மாவட்டத் தலைவராக ப. முத்துக்கருப்பன், மாவட்டச் செயலராக ஏ. கருப்பையா, மாவட்டப் பொருளாளராக கே. தங்கவேல் உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

10/16: ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 10 அணிகள்!

இந்தியாவில் ரூ. 1.18 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான் நிறுவனங்கள்!

70 ஆண்டுகால நண்பனை இழந்துவிட்டேன்... இயக்குநர் சுந்தர்ராஜன் வருத்தம்!

களைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!
விடியோக்கள்

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK



