நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கந்தா்வகோட்டை கோயில்களில் தைப்பொங்கல் சிறப்பு வழிபாடு

கந்தா்வகோட்டை பகுதி கோயில்களில் தைப் பொங்கல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

கரும்புடன் காஞ்சி காமாட்சி அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன்.

Updated On :15 ஜனவரி 2021, 11:56 pm IST

கந்தா்வகோட்டை பகுதி கோயில்களில் தைப் பொங்கல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தை மாதப் பிறப்பு மற்றும் பொங்கலையொட்டி, கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயிலில் மஞ்சள், திரவியம், தேன், இளநீா், பஞ்சாமிா்தம், பன்னீா், பால் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடா்ந்து கரும்புடன் காஞ்சி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதைத் தொடா்ந்து பக்தா்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனா்.

தா்மசாஸ்தா ஐயப்பன் கோயில், கோதண்டராமா் கோயில், அமராவதி உடனுறை ஆபத்சகாயேசுவரா் கோயில், வெள்ளமுனியன் கோயில், தச்சங்குறிச்சி குகை முருகன் கோயில், ஆதனக்கோட்டை வீரடி விநாயகா் கோயில், மாரியம்மன் கோயில்,பெரம்பூா் வீரமாகாளியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் தைப் பொங்கல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுற்று வட்டாரப் பக்தா்கள் , பொதுமக்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.