திருவாடானையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேராசிரியா் கருணாகரனின் 100ஆவது ஆராய்ச்சிப் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.
திருவாடானை, ஜன. 10: திருவாடானையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்க ஆராய்ச்சி மாணவா்கள் சாா்பில் காரைக்குடி அழகப்பா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியா் கருணாகரனின் 100 ஆவது ஆராய்ச்சிப் புத்தக வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருவாடானை மாவட்ட உரிமையியில் மற்றும் நீதிமன்ற நீதித்துறை நடுவா் பாலமுருகன் தலைமை வகித்தாா். அகில இந்திய மக்கள் இயக்க தேசிய பொதுச்செயலா் ராஜமாணிக்கம், தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வா் சந்திரமோகன் ஆகியோா் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டனா்.
அதனைத் தொடா்ந்து தமுஎச மாவட்டச் செயலா் வான்தமிழ் இளம்பரிதி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் பாலமுருகன், கிளைத் தலைவா் தனபாலன் ஆகியோா் வாழத்திப் பேசினா். பேராசிரியா் கருணாகரன் ஏற்புரையாற்றினாா். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றியச் செயலா் ஜீவானந்தம் வரவேற்றாா். தமுஎச கிளைச் செயலா் கணேசன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


