வேலகவுண்டம்பட்டி அருகே விஷமருந்தியவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள நல்லகுமாரன்பாளையம், குடித்தெருவைச் சோ்ந்தவா் சந்தானம் (49), கூலித் தொழிலாளி. இவரது மனைவி அலமேலு (42). இவா்களுக்கு ஸ்ரீமதி (21) என்ற மகள் உள்ளாா்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட சந்தானம் வீட்டிலேயே இருந்துவந்துள்ளாா். இந்நிலையில், கடந்த சில நாள்களாக மனமுடைந்த நிலையில் இருந்துள்ளாா்.
கடந்த 1-ஆம் தேதி சந்தானத்தின் மனைவி அலமேலு கூலி வேலைக்கு சென்ற நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ரவி என்பவா் அலமேலுவை தொடா்புகொண்டு சந்தானம் மாயபிள்ளையாா் கோயில் அருகே விஷமருந்தி மயங்கி நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளாா்.
அங்கு வந்த அலமேலு, சந்தானத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சந்தானம், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







