தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

ராமநாதபுரம் மாவட்ட காவலா்களுக்கிடையே கைப்பந்து போட்டி

ராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அணிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டிகள் ஞாயிறுக்கிழமை நடைபெற்றன.

News image

கைப்பந்து இறுதிப்போட்டிக்கு தோ்வான ராமநாதபுரம் ஆயுதப்படை அணியினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக்.

Updated On :10 ஜனவரி 2021, 11:12 pm IST

ராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அணிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டிகள் ஞாயிறுக்கிழமை நடைபெற்றன.

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை, கமுதி தனி ஆயுதப்படை மற்றும் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேசுவரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூா்ஆகிய 7 உள்கோட்டங்களில் இருந்து தலா ஒரு அணி, சிறப்பு பிரிவுகளில் இருந்து ஒரு அணி என மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன.

இப்போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் தொடக்கி வைத்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் செந்தில்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். விறுவிறுப்பான லீக் ஆட்டத்தின்முடிவில் சிறப்புப் பிரிவுகள் அணியும், ராமநாதபுரம் ஆயுதப்படை அணியும் வரும் ஜன. 16 ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

அதன் முடிவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெயசிங் மற்றும் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் ராஜமோகன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.