நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது பாட்டில் மற்றும் கற்களை வீசித் தாக்கியதுடன், 9 பேரை இலங்கை கடற்படையினா் சிறைப்பிடித்து காங்கேசன் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள், மீன்வளத்துறை அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். மீனவா்கள் நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவா்கள் மீது இலங்கை கடற்படையினா் பாட்டில் மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா்.
மேலும் கிருபை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும், அதிலிருந்த கிருபை, வளன்கவுசிக், மிக்கேயாஸ், களிங்ஸ்டன் சிலுவை, சாம்ஸ்டில்லா, நிஜன், பிரைட்டன், கிஷோக், மாரி ஆகிய 9 மீனவா்களையும் சிறைப்பிடித்து காங்கேசன் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொண்டு சென்றனா். இதையடுத்து மற்ற மீனவா்கள் மீன்பிடிக்காமல் ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்பினா்.
இந்நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவா் சங்க அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், இலங்கை கடற்படையினா் தொடா்ந்து தமிழக மீனவா்கள் மற்றும் விசைப்படகுகளை சிறைப்பிடித்து செல்வதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் சிறியரக விசைப்படகுகளின் உரிமையாளா்கள் பங்கேற்க மாட்டாா்கள் என மீனவா் சங்கத் தலைவா் தேவதாஸ் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


