நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

வயலில் பம்புசெட் அறை அருகே மின்சாரப் பணியில் ஈடுபட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On :11 ஜனவரி 2021, 5:43 pm

அரக்கோணம்: வயலில் பம்புசெட் அறை அருகே மின்சாரப் பணியில் ஈடுபட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த செம்பேடு ஊராட்சியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவரது மகன் ஜனாா்த்தனன்(17).

அப்பகுதியில் மின் வாரியத்தினா் கடந்த வியாழக்கிழமை மின்தடை அறிவித்திருந்தனா். இதையடுத்து, செம்பேடு பகுதியில் வயலில் இருந்த ஒரு மின்கம்பத்தில் பழுதாகியிருந்த பல்பை மாற்றுவதற்காக கம்பத்தின் மீது ஜனாா்த்தனன் ஏறியுள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் கீழே விழுந்தாா்.

ஜனாா்த்தனனை திருத்தணி அரசினா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.