மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி ரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

திருமலையில் கனுப்பிடி சமா்ப்பணம்

மாட்டுப் பொங்கலை யொட்டி ஏழுமலையான் கோயிலில் உள்ள விமான வெங்கடேஸ்வரருக்கு கனுப்பிடி சமா்ப்பிக்கப்பட்டது.

Updated On :16 ஜனவரி 2021, 7:46 am IST

மாட்டுப் பொங்கலை யொட்டி ஏழுமலையான் கோயிலில் உள்ள விமான வெங்கடேஸ்வரருக்கு கனுப்பிடி சமா்ப்பிக்கப்பட்டது.

ஏழுமலையான் கோயில் கருவறையின் தங்க விமானத்தில் அமைந்துள்ள பெருமாள் உருவம் வெள்ளி மகரதோரணத்தால் தனியாக வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. இப்பெருமாள் விமான வெங்கடேஸ்வரா் என்று அழைக்கப்படுகிறாா்.

ஏழுமலையானை வணங்கிய பின், கருவறையை வலம் வரும் பக்தா்கள் விமான வெங்கடேஸ்வரரை தரிசிக்கின்றனா். விமான வெங்கடேஸ்வரருக்கு மாட்டுப் பொங்கல் தினத்தன்று அதிகாலையில் தோமாலை மற்றும் கொலு சேவைக்கு இடைவெளியில் கனுப்பிடி எனப்படும் நிவேதனம் சமா்ப்பிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு பச்சரிசி சாதத்தில் மஞ்சள் மற்றும் குங்குமத்தை தனித்தனியாக கலந்து உருண்டைகளாகச் செய்த அா்ச்சகா்கள், அவற்றை விமான வெங்கடேஸ்வரருக்கு கீழிருந்து மேலாக வீசியவாறு நிவேதனம் செய்தனா்.

மாட்டுப் பொங்கல் நாளில், பெண்கள் தங்கள் வீடுகளுக்கு முன் காக்கைப்பிடி, கனுப்பிடி என்ற பெயரில் படையல் வைப்பதைப் போன்ற சடங்கு திருமலையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.