சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

நினைத்ததை நிறைவேற்றும் சங்கரநாராயணர்

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயிலில், பக்தர்கள் நினைத்து வழிபடும் காரியங்கள் நிறைவேறுவதாக கூறப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது சங்கரன்கோவில். இங்குள்ள சங்கரநாராயணர்

Updated On :26 செப்டம்பர் 2012, 12:43 pm

ங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயிலில், பக்தர்கள் நினைத்து வழிபடும் காரியங்கள்

நிறைவேறுவதாக கூறப்படுகிறது.

திருநெல்வேலியில் இருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது சங்கரன்கோவில். இங்குள்ள சங்கரநாராயணர்

கோயிலில் சிவனும், திருமாலும் ஒரே திருவுருவில் காட்சியளிக்கின்றனர். இந்த கோயில் 11- ம்

 நூற்றாண்டில் மன்னர் உக்கிரபாண்டியனால் கட்டப்பட்டது.

ஒரு முறை சிவபெருமானின் துணைவியார் உமாதேவி, சிவபெருமானிடம், திருமாலும், தாங்களும்

சேர்ந்திருக்கும் திருக்கோலத்தை காண வேண்டும் என்றாராம். இதைக் கேட்ட சிவபெருமான், அகத்தியர்

தவம் செய்யும் பொதிகை மலை அருகில் இருக்கும் புன்னைவனத்தில் பலர் என்னை நோக்கி தவம் செய்து

கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து நீயும் தவம் செய்தால், நீ விரும்பிய திருவுருவத்தை நான்

காட்டுவேன் என்றாராம்.

சங்கரநாராயண சுவாமி கோயில் உள்பிரகாரத்தில் பிரதி வெள்ளிக்கிழமை இரவுதோறும் தங்கச் சப்பரத்தில் உலா வரும் கோமதி அம்பாள்

இறைவனின் வேண்டுகோளை ஏற்று உமாதேவி, அந்த திருவுருவத்தைக் காண புன்னைவனமாகிய

சங்கரன்கோவிலில் சிவபெருமானை வேண்டி கடும் தவம் புரியத் துவங்கினார். அவரது தவத்தால் அகமகிழ்ந்த

சிவபெருமான், ஆடி மாதம் பெüர்ணமி அன்று ரிஷப வாகனத்தில் திருமாலுடன் இணைந்து சங்கரநாராயணராக   உமாதேவிக்கு காட்சிக் கொடுத்ததாக ஐதீகம்.

பின்னர் உமாதேவியின் விருப்பப்படி, சிவபெருமான் சங்கரலிங்கமாக காட்சி கொடுத்தார். உமாதேவி,

கோமதி அம்பாளாக எழுந்தருளினார். இதனால் இக் கோயிலில் சிவபெருமான், சங்கரநாராயணராகவும்,

சங்கரலிங்கமாகவும் இரு உருவில் உள்ளார்.





சங்கரநாராயண சுவாமி சன்னதியின் எழில்மிகு தோற்றம்

இந்த வைபவம்தான் ஆடி தவசு திருவிழா என்று 12 நாள்கள் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. இதில்

தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் சுமார் 6 லட்சம் பேர் கலந்து   கொள்கின்றனர்.

இந்த கோயிலின் கோமதி அம்பாள் சன்னதி முன் உள்ள ஸ்ரீ சக்கரக் குழி மிகவும் பிரசித்து பெற்றது ஆகும். இந்த

ஸ்ரீ சக்கர குழியில் அமர்ந்து கோமதி அம்பாளை நினைத்து மனமுருகி தியானித்தால், நினைத்து நடக்கும் அப்

பகுதி மக்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.





சங்கரன்கோவிலில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ராஜகோபுரம்



ஸ்ரீ சக்கரக் குழி, தற்போது அப் பகுதி மக்களையும் தாண்டி, அரசியல் தலைவர்களிடமும், திரைப்பட

நட்சத்திரங்களிடமும் பிரபலமடைந்து வருகிறது. அண்மையில் ஸ்ரீ சக்கரக் குழியில் இருந்து தியானித்தவர்களின்   வரிசையில் நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன் என ஒரு பட்டியலே நீளுகிறது.

சங்கரநாராயணரை தரிசிக்க:   இக் கோயில் மாவட்ட தலைநகரான திருநெல்வேலியில் இருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

திருநெல்வேலியில் இருந்து இங்கு செல்ல 15 நிமிஷத்துக்கு ஒரு பஸ் உள்ளது. இவ்வூருக்கு மதுரையில் இருந்து காலை 6.30 மணி, 11 மணி, மாலை 5 மணி ஆகிய நேரங்களில் ரயில்கள் இருக்கின்றன. இவ்வூரில் இருந்து மதுரை செல்வதற்கு காலை 8 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 5 மணி ஆகிய நேரங்களில் ரயில்கள் இருக்கின்றன.





சங்கரநாராயண சுவாமி கோயிலின் முழுத்தோற்றம்

பக்தர்கள் தங்குவதற்கு விடுதி வசதியும், மடங்களும் உள்ளன.

இக் கோயில் அதிகாலை 5.30 மணியில் இருந்து பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி மணியில் இருந்து

இரவு 9 மணி வரை திறந்திருக்கும். இக் கோயில் அலுவலகத்தை 04636 -222265 என்ற தொலைபேசி எண்ணில்  தொடர்பு கொண்டு மேலும் விவரம் அறியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.