திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

கான் சிட்டி படத்தில் இன்னும் எத்தனை கதாபாத்திரங்கள்?

நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் “கான் சிட்டி” படத்தின் புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம்...

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 10:12 am

நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் “கான் சிட்டி” திரைப்படத்தின் புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ள புதிய படம் ”கான் சிட்டி”. புதுமையான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படத்தை “பவர் ஹவுஸ்” நிறுவனம் தயாரித்துள்ளது.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகர்கள் அனா பென், வடிவுக்கரசி, யோகி பாபு ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே, கான் சிட்டி படத்தில் நடித்துள்ள நடிகர்கள் ராதாரவி, பொன்வண்ணன், ரமேஷ் திலக், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, பரத்வாஜ் ரங்கன், தீபா ராமானுஜம், ஷாஜி சென் ஆகியோரின் கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், கான் சிட்டி படத்தில் நடித்துள்ள நடிகர்கள் விடிவி கணேஷ், அருள் தாஸ் மற்றும் கன்னட நடிகர் நந்தகோபால் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் சனிக்கிழமை (ஏப். 4) அன்று வெளியாகியுள்ளன.

நடிகர்கள் அருள் தாஸ் - கோபி, விடிவி கணேஷ் - கங்காதரன் மற்றும் நந்தகோபால் - கல்யாணசுந்தரம் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால் இன்னும் எத்தனை நடிகர்கள் “கான் சிட்டி” படத்தில் நடித்துள்ளனர் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Summary

New characters have been introduced in the film "Don City," starring actor Arjun Das as the lead.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.