திருவள்ளூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீகங்கையம்மன் கோயிலில் 58-ஆம் ஆண்டு யாத்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர், ஒண்டிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ கங்கையம்மன் கோயில். இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் யாத்திரைத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 58-வது யாத்திரைத் திருவிழா மே 19-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி ஆண் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். பெண் பக்தர்கள் கோயிலில் பொங்கல் வைத்து
வழிப்பட்டனர். செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் அம்மனுக்கு பாலாபிஷேகம், பழம் குத்துதல், கூழ் வார்த்தல், குடம் சுற்றுதல், ரதம் இழுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் காப்பு கட்டிய ஆண் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுந்தனர்.
÷பின்னர் டிராக்டரில் பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்தல், பொக்லைன் இயந்திரத்தில் அந்தரத்தில் தொங்கியபடி வந்து அம்மனுக்கு மாலை அணிவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வழிபட்டனர்.
கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர், மணவாளநகர், ஒண்டிக்குப்பம், வெங்கத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்

குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு: தினப்பலன்கள்!
தொடரும் ஜனநாயகப் பின்னடைவு!

திமுகவினா் கூப்பன் விநியோக வழக்குப் பதிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


