வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பேஸ் டூ பேஸ் என்ற நிகழ்ச்சியில் இளைஞர்களைச் சந்திக்கிறார்.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜியுடன் இளைஞர்கள் சேட்டிங்கில் கலந்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சி பேஸ்புக்கில் நேரலையாக வெளியாகிறது. வரும் ஜூன் 23ம் தேதி ஞாயிறு மாலை 7.30 முதல் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:
இது யாவராலும் சந்தேகமின்றி ஒரு பக்கம் அதுவும் யாரும் வேறு விதமாக சொல்லாமல் இருக்கும் பக்கமாக இருக்க போகிறது, வாழும் கலை நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இந்த facebook என்னும் சமூக ஊடகத்தை ஒரு அர்த்தமுள்ள கருவியாகவும், உரையாடலாகவும் ஒரு மாற்றத்தை, உலக மக்கள், அதுவும் கோடானகோடி மக்களுக்கு ஆன்லைனிலும், ஆப்லைனிலும் எல்லோரும் விரும்பும்படியாக இந்த facebook மூலமாக நேருக்கு நேர் உரையாடுகிறார்.
இந்த பக்கத்தை ஒரு பளிச்சிடும் நிகழ்வாக நடைபெறும் என்றும், இந்த நிகழ்ச்சியை ஊக்கவிக்கவும் மற்றும் வன்முறையற்ற, மன அழுத்தமில்லாத ஒரு சமுதாயமாக இருக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கம். இந்த facebook நிகழ்வு, ஸ்ரீ ஸ்ரீயுடன் 7:30 pm - 9:30 pm வரை, ஜூன் 23 ஆம் 2013 நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வின் நோக்கம் என்னவென்றால் ஒரு உலக இணைப்பை பொறுப்புள்ள குடிமகனிற்கு கொண்டு வருவதற்காக நடைபெறுகிறது. அது மட்டுமின்றி மக்கள் சிறிதளவு தயாராக தாங்கள் நேரத்தை இந்த அமைதி மற்றும் வன்முறையற்ற சமுதாயத்தை கொண்டுவருவதற்கு, தங்களாலான உதவியை செய்வதற்கு தயாராக உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கருக்கு இவ்வாறு சமூக ஊடக மற்றும் நெட்வொர்குகல் போன்ற நிகழ்சிகளில் வருவது முதல் முறையன்று. அவருடைய நோக்கம் "ஒரு உலக குடும்பம்" என்ற செய்தியை இந்த சமூக வலைபின்னலின் மூலம், தெரிவித்து, பரப்பவும் இது உதவகிறது. ஜனவரி 26 ஆம் தேதி, இவ்வருடத்தில், குருதேவ் கூகுள் hangout என்ற மேடையின் மூலம் பல மில்லியன் கணக்கான மக்களுக்கு, இவ்வுலகளவில் உரையாடினார்.
ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்காக இவ்வாறு செய்தார். இந்த பளிச்சிடும் மிகவும் பெரிதளவில் ஒரு ஆன்லைன் சேகரிப்பாக அமைந்தது.இந்த நிகழ்வின் மூலம் சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள், கலைஞர்கள்,விளையாட்டு வீரர்கள்,எழுத்தாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் போன்றவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து ஓமான், தைவான், பராகுவே, சிம்பாப்வே, ஸ்லோவேனியா, அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, ஸ்வீடன், அர்ஜென்டினா, இஸ்ரேல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதில் கலந்துகொண்டார்கள்.
தொழில் நுட்பம் என்ற பெயரில் இந்த உலகம் ஒரு கிராமம் போலும், அதில் ஆன்மிகம் என்பது ஒரு உலக குடும்பம் போல் அமையும். ஸ்ரீ ஸ்ரீ பலநேரம் கூறுவது என்னவென்றால் தொழில் நுட்பமும், ஆன்மீகமும் ஒரு சினெர்ஜி என்பார். இதை ஒரு தொழில் நுட்ப மேடை மூலம் மக்களை இந்த ஆன்மீக மற்றும் தொழில் நுட்பத்தில் ஈடுபடுத்தி ஒரு மன அழுத்தமின்றி மற்றும் வன்முறையின்றி ஒரு உலகத்தை உருவாக்க செய்கின்றார். நாம் நம் மன அழுத்தத்தை புறக்கனித்தால், இந்த கனவு - அதாவது ஒரு உலக குடும்பம் என்பது வெகு தூரத்தில் இல்லை என்று அவர் இந்த கூகுள் hangout மூலம் தெரிவிக்கிறார்.
Facebook போன்ற சமூக ஊடகம் ஒரு பயனுள்ள மேடையாக இளைஞர்களக்கு இணைய பயன்படுகிறது, இதன் பலாபலன் இந்த சமூக மேடையின் மூலம் உயர்த்தபடுகிறது. இளைஞர்கள் இவ்வுலகில் அமைதியற்ற நிலையில் இருந்து, தாங்கள் எதாவது இந்த உலகத்திற்கு செய்ய வேண்டும் என்று இருகிறார்கள், அனால் அவர்களின் சக்தி, ஒரு திசையில்லாத நிலையில் இருக்கிறது. இந்த facebook நிகழ்ச்சி இந்த சமுதாயத்தில் ஒரு பயனுள்ள பங்காக உதவுகிறது. அது மட்டுமின்றி அவர்களின் பங்கு இந்த சமூதாயத்தை ஒரு நல்ல சமூதாயமாக மாற்ற உதவுகிறது. இது அவர்களை அதிகாரதிற்குரிய மக்களாக மாற்றும் என்றும் கார்த்திக் கிருஷ்ணா செய்தி ஊடக மேலாளர் - வாழும் கலை கூறுகிறார்.
இந்த நிகழ்வின் மூலம் ஸ்ரீ ஸ்ரீ எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார், இந்நிகழ்வு நான்கு பிரிவுகளாக உள்ளன.
ஸ்ரீ ஸ்ரீயின் தனிப்பட்ட வாழ்க்கை,
வெற்றி மற்றும் படைப்பாற்றல்,
உலக பிரச்சனைகள்,
அன்பு மற்றும் உறவுகள்.
ஒவ்வொரு பிரிவும் சுவாரசியமான துணுக்குகளோடு, நகைச்சுவைபொருந்தியதும் வீடியோ காட்சிகளாகவும்அமையும்.இந்நிகழ்வில்ஆன்லைன் தியானமும் உண்டு.
பங்கேற்பாளர்கள் தாங்கள் கேள்விகளை, facebook யில் தெரிவிக்கலாம். வாழும் கலை அல்லது ட்விட்டர் வழியாக "ஆஸ்க் ஸ்ரீ ஸ்ரீ" என்ற அடையாளம் மூலமும் கேட்கலாம். சிறந்த கேள்விகள் தேர்ந்தெடுக்கபட்டு, ஒரு குழுவின் கருத்து கணிப்புக்கு அனுப்பபடும். தேர்ந்தெடுக்கபட்ட கேள்விகளெல்லாம் ஸ்ரீ ஸ்ரீக்கு ஒரு புரவலன் மூலம், கேட்டவரின் சார்பில் இந்த நிகழ்வில் கேட்கப்பட்டு, பல நாடுகளிலிருந்து கேட்கப்படும். இந்நிகழ்வை webcast மூலமாக காணலாம். ( ஸ்ரீ ஸ்ரீயின் facebook பக்கத்தில்) விவரங்களுக்கு: logon https://www.facebook.com/HHSriSriRaviShankar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இதயம் முரளி படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பு!

முதல்வர் விஜய் தலைமையில் தவெக தோழமை கட்சிக் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு!

உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: ஓய்வை அறிவித்தார் ஜெர்மனி கோல்கீப்பர்!
முதல் டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



