திருமலையில் ஞாயிற்றுக்கிழமை கருடபஞ்சமியையொட்டி மாலை 6 மணிக்கு கருடசேவை நடைபெற்றது.
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை கருட பஞ்சமி உத்ஸவம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கருட பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் ஆரத்தி நடத்தப்பட்டது. மாலை 6 மணி அளவில் மலையப்பஸ்வாமி கருட வாகனம் மேல் எழுந்தருளினார். மாட வீதிகளில் வலம் வந்து கூடியிருந்த பக்தர்களுக்கு மலையப்பஸ்வாமி அருளினார்.
தரிசனத்துக்கு 26 மணிநேரம் காத்திருப்பு: திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்துக்கு 26 மணிநேரமும் நடைபாதை மூலம் வரும் பக்தர்கள் தரிசனத்துக்கு 9 மணிநேரமும் ஆனது. அதிக கூட்டம் காரணமாக ரூ.300 விரைவு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. சனிக்கிழமை முழுவதும் 71,522 பக்தர்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிமுதல் மாலை 6 மணிவரை 52,136 பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆற்று மணல் கடத்தல்: இருவா் கைது, பைக்குகள் பறிமுதல்

காட்பாடியில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி!

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண்ணின் உடல் தானமாக அளிப்பு

போளுவாம்பட்டி வனச் சரகா் மாரடைப்பால் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



