மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சபரிமலையில் ஜனவரி 14-ல் மகரசங்கராந்தி நெய் அபிஷேகம்

சபரிமலை ஐயப்பன் கோயில் மகரஜோதி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மகரசங்கராந்தி நெய் அபிஷேகம் ஜனவரி 14 காலை 6.56 மணிக்கு நடைபெறும். இதற்காக திருவாங்கூர் அரண்மனையில் இருந்து சிறப்பு நெய் சபரிமலைக்கு கொண்டுவரப்படும் என தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:13 pm

தினமணி

சபரிமலை ஐயப்பன் கோயில் மகரஜோதி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மகரசங்கராந்தி நெய் அபிஷேகம் ஜனவரி 14 காலை 6.56 மணிக்கு நடைபெறும். இதற்காக திருவாங்கூர் அரண்மனையில் இருந்து சிறப்பு நெய் சபரிமலைக்கு கொண்டுவரப்படும் என தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்தார்.

சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு மகரஜோதி பூஜை வழிபாடு, நெய் அபிஷேகம் கடந்த டிசம்பர் 31 முதல் தொடங்கி நடந்து வருகிறது.

அன்று முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்துசெல்கின்றனர். தொடர்ந்து ஜனவரி 20 வரை கோயில் நடைதிறந்திருக்கும். ஜனவரி 14-ல் பிரசித்திபெற்ற மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

ஜனவரி 18 வரை பக்தர்கள் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யலாம். மாலை 5 மணிக்குப் பிறகு எருமேலி பெருவழி நடைபாதை வழியாகவும், உப்புப்பாறை வழியாகவும் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல கேரள போலீஸார் தடைவிதித்துள்ளதால் மாலையில் எருமேலியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.