சபரிமலையில் ஜனவரி 14-ல் மகரசங்கராந்தி நெய் அபிஷேகம்
சபரிமலை ஐயப்பன் கோயில் மகரஜோதி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மகரசங்கராந்தி நெய் அபிஷேகம் ஜனவரி 14 காலை 6.56 மணிக்கு நடைபெறும். இதற்காக திருவாங்கூர் அரண்மனையில் இருந்து சிறப்பு நெய் சபரிமலைக்கு கொண்டுவரப்படும் என தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்தார்.









