சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் வெள்ளிக்கிழமை இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் வெள்ளிக்கிழமை இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நடராஜர் கோயிலில் சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராயர் சுவாமியை முன்னிறுத்தி திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் எஸ்.டி.கோவிந்தராஜ தீட்சிதர் கொடியேற்றினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசித்தனர். பின்னர் பஞ்சமூர்த்தி தங்கம், வெள்ளி மஞ்சங்களில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. டிஎஸ்பி ராஜாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
உற்சவத்தை முன்னிட்டு ஜூலை 13-ம் தேதி சனிக்கிழமை தேர்த் திருவிழா நடைபெறுகிறது. சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்தி அதிகாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் திருத்தேரில் எழுந்தருளுதல், தேர் விதிஉலா வந்த பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
ஜூலை 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் மகாபிஷேகமும், திருவாபரண அலங்கார காட்சியும், பிற்பகல் 1 மணிக்கு மேல் பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது. ஜூலை 15-ம் தேதி முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சியுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் எம்.காசிராஜ தீட்சிதர், துணைச்செயலாளர் எஸ்.டி.ருத்ரகணேஷ் தீட்சிதர், இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் க.கிருஷ்ணகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...