மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் கொடியேற்றம்!

புகழ்பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன்கோயில் ஆடி மாத உற்ஸவம் வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொ

News image
Updated On :20 ஜூலை 2013, 7:06 am

ஜி.சுந்தரராஜன்

புகழ்பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புகழ்பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன்கோயில் ஆடி மாத உற்ஸவம் வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி வீதிவலமாக கொண்டு வரப்பட்டு உற்ஸவரான ஸ்ரீமாரியம்மன் முன்னிலையில் கருவறை எதிரே உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. திரளான மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசித்தனர்.

ஜூலை 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை தெருவடைச்சான் உற்சவமும், 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும், 29-ம் தேதி திங்கள்கிழமை தீமிதி உற்சவமும் நடைபெறுகிறது. ஜூலை 30-ம் தேதி செவ்வாய்க்கிழமை விடையாற்றி உற்சவமும்,  ஜூலை 31-ம் தேதி புதன்கிழமை மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவத்துடன் விழா நிறைவுடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் என்.வீராசாமிபிள்ளை, அறங்காவலர்கள் என்.கலியமூர்த்தி, என்.செல்லத்துரை ஆகியோர் செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.