பழனி அருகே உலக நலனை முன்னிட்டும் மழை வேண்டியும் சண்டி ஹோமம்
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சிலஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் கடும்வறட்சி ஏற்பட்டுள்ளது. இருபோகம் விளையும் வயல்களில் ஒருபோகம் கூட பயிர்செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பழனியை அடுத்த அ.கலையமுத்தூர் அக்ரஹாரத்தில் ஸ்ரீஅழகுநாச்சியம்மனுக்கு உலகநலன், மழைவேண்டி இரண்டு நாள் சண்டிஹோமம் நடைபெற்றது.









