பழனி திருஆவினன்குடி கோயிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது: செப்.7ம் தேதி குடமுழுக்கு
பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. வரும் செப்.7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.


பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. வரும் செப்.7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் அடிவாரம் பகுதியில் அமைந்துள்ளது திருஆவினன்குடி கோயில். அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் மூலவர் முருகன் அருள்மிகு குழந்தை வேலாயுதசாமியாக மயில்மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பலவருடங்களான நிலையில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் பல இலட்சம் மதிப்பீட்டில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சிலமாதம் முன்பு துவங்கியது.
கோயிலில் உள்ள கல்தூண்களில் உள்ள சிற்பங்களில் எண்ணெய் முழுக்கு அதிகமாக இருந்த நிலையில் இதற்கென பிரத்யேகமான கெமிக்கல்கள் பூசப்பட்டு அவை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் சிலைகள் அவற்றின் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் தற்போது காட்சியளிக்கிறது. வாயிற்கோபுரத்தின் மீதிருந்த சுதைகள் சேதமுற்று இருந்ததால் அவை முற்றிலும் சீர் செய்யப்பட்டு பல்வேறு வர்ணம் பூசப்பட்டு கோபுரம் வண்ணமயமாக செய்யப்பட்டுள்ளது.
மேலும், சனீஸ்வரர் சன்னதிக்கு புதிய கோபுரம் நிறுவப்பட்டுள்ளது. மயில் மண்டபத்திலும் புதிய டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு கும்பாபிஷேக வேலைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. கோயிலில் உள்ள அனைத்து சிற்பங்களும் சரி செய்யப்பட்டு, சுதைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இக்கோயிலுக்கு வரும் செப்.7ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் யாகசாலை பூஜைகள் துவங்க ஏதுவாக வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் நடுதல் துவங்கியது. காலை 9மணியளவில் தங்கக்கொடி மரம் முன்பு முகூர்த்க்கால்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
பிரதானமாக ஒரு கலசம், நவதானியம், நவரத்தினங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் தீபாராதனை நடைபெற்றது.
பூஜைகளை அமிர்தலிங்கம் குருக்கள் தலைமையில் செல்வசுப்ரமண்யகுருக்கள், சுந்தரமூர்த்திசிவம் குருக்கள் உள்ளிட்ட பலர் செய்தனர்.
தீபாராதனையைத் தொடர்ந்து கம்பங்கள் மேளதாளம் முழங்க எடுத்து செல்லப்பட்டு ஒன்று உட்பிரகாரத்திலும், மற்றொன்று வெளியே உள்ள கொடிக்கம்பத்துக்கு சிறிது தள்ளியும் வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு, இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், டிஎஸ்பி.,சண்முகசுந்தரம், திருப்பூர் லாட்ஜ் மகேஷ், காண்ட்ராக்டர் நேரு, விஸ்வ ஹிந்து பரிஷத் செந்தில்குமார், பேஷ்கார் நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...