ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சித்திரா பௌர்ணமி: பழனி பெரியநாயகிம்மன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம்

பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் இருந்து திருஆவினன்குடி கோயிலுக்கு 108 பால்குட ஊர்வலம் புறப்பாடு விமரிசையாக நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2014, 6:08 am

என்.​ அங்​கு​பாபு

பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் இருந்து திருஆவினன்குடி கோயிலுக்கு 108 பால்குட ஊர்வலம் புறப்பாடு விமரிசையாக நடைபெற்றது.

பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை சித்ராபவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் புறப்பாடானது.  காலையில் அருள்மிகு பெரியநாயகியம்மன், அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் சோமாஸ்கந்தர், அருள்மிகு கைலாசநாதர் மற்றும் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேதர் நடராஜர், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடைபெற்றது.  பின்னர் பால்நிரப்பிய 108 பால்குடங்களுக்கு மலர்கள் கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பால்குடங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை கந்தவிலாஸ் செல்வக்குமார், பேஷ்கார் ராமலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை தலைவர் செல்வசுப்ரமணிய குருக்கள் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.   பின்னர் பழனிக்கோயில் யானை கஸ்தூரி முன்னே செல்ல பால்குடங்கள் கோயிலை வலம் வர செய்யப்பட்டு மார்க்கெட், பேருந்து நிலையம் வழியாக திருஆவினன்குடி கோயிலுக்கு சென்றடைந்தது. அங்கு காலசந்தியின் போது அருள்மிகு வேலாயுதசாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டு மஹாதீபாராதனை நடத்தப்பட்டது.  ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு சித்ரான்ன பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.