உள்ளாவூர் அகத்தீஸ்வர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வாலாஜாபாத் சாலையில் உள்ளாவூர் கிராமத்தில் உள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வாலாஜாபாத் சாலையில் உள்ளாவூர் கிராமத்தில் உள்ளது. மிகப் பழைமையான அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில். இவ்வாலயத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஸ்ரீ ஜேஷ்டாதேவிக்கும் சந்நதி அமைந்துள்ளது விசேஷமாகும். தகுந்த பராமரிப்பு இன்றி ஆலய வழிபாட்டு நிலையிலும் தொய்வு ஏற்பட்டிருந்தது.
தற்போது ஆலயம் வைணவ பெண் பக்தர் ஒருவரின் முயற்சியால் கிராம மக்கள் மற்றும் சேவார்த்திகளின் உதவியுடன் திருப்பணிகள் முடிவடைந்து ஆலயம் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. ஸ்ரீ காஞ்சி காமகோடி மடாநிபதிகள் ஆசியுடன் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஏப்ரல் 3ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30க்குள் நடைபெறுகின்றது. முன்னதாக அன்று காலை 6 மணிக்கு உள்ளாவூர் வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும். யாகசாலை பூஜைகள் இன்று (ஏப்ரல் 1) துவங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...