அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் லட்சார்ச்சனை விழா
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், திங்களூர், அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில்....


தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், திங்களூர், அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் இரண்டாவது கிரகமான சந்திரன் பரிகார ஸ்தலமாகும். அம்பாள் பெரியநாயகி
அம்மன். சந்திர பகவானுக்கு ரிஷபம் உச்ச வீடு. கடகம் சொந்த வீடு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரன் எந்த இராசியில் இருக்கிறதோ அதுவே அவரது இராசியாக அமைகிறது. சந்திரனின் சாரத்தைக் கொண்டே திருமணப் பொருத்தங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன.சந்திரன் நமது மனதுக்கும் காரகனாக விளங்குகிறான். அரசாங்க கௌரவம், குடும்பத்தில் பற்று பாசம் நிலைக்கவும், மனம் அமைதியுடன் திகழவும் சந்திர பகவானின் அருள் அவசியம்.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமி அன்று சந்திர பகவான் திங்களூர் கைலாசநாதர் மீது தன் பொற்கரங்களால் தழுவும் அதிசயம் இன்றளவும் நிகழ்ந்து வருகிறது.
வரும் 03.04.2015 வெள்ளிக்கிழமை அன்று பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு கைலாசநாதர் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அன்று காலை முதல் அருள்மிகு சந்திர பகவானுக்கு சிறப்பு ஏகதின இலட்ச்சார்ச்சனையும் நடைபெற உள்ளது. இந்த இலட்ச்சார்ச்சனையில் அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்த மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 இராசிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.
இலட்ச்சார்ச்சனை கட்டணம் ரூ.100/-
அன்றைய தினத்தில் நேரில் வர முடிந்தவர்கள் சங்கல்பம் செய்து பரிகாரம் செய்து கொள்ளலாம். நேரில் வர முடியாதவர்கள் ரூ.100/-க்கு மணியார்டர் அல்லது டிடியுடன் தங்கள் நட்சத்திரம், இராசி ஆகிய விபரங்களுடன் முழு முகவரியுடன் கீழ்க்கண்ட விலாசத்திற்கு அனுப்பினால் அவர்களுக்கு சங்கல்பம் செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்
அனுப்ப வேண்டிய முகவரி;
செயல் அலுவலர்
அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயில்,
(சந்திரன் பரிகார ஸ்தலம்)
திங்களூர், திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் - 613 204
தொலைபேசி 04362 262499
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...