ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

மழை மலை மாதா தேவாலயப் பெருவிழா: அக். 1-இல் தொடக்கம்

அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா தேவாலய ஆண்டுப் பெரு விழா வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது.

Published On :

அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா தேவாலய ஆண்டுப் பெரு விழா வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது.

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மழை மலை மாதா தேவாலயத்தின் 47-ஆவது ஆண்டுப் பெரு விழா வருகிற அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருக்கொடி மந்திரிப்பு, திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு மழை மலை மாதா மறை மாவட்ட முதன்மை குரு மரிய ஜோசப் முன்னிலை வகிக்கிறார். வேலூர் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் சௌந்தர ராஜு தலைமை வகிக்கிறார்.

மறுநாள் வெள்ளிக்கிழமை (2.10.2015) காலையில் திருவூடல் திருவிழா, திருப்பலி நடைபெறுகிறது. இதில் மறை மாவட்ட இளங்குரு மடம் என்.ஆர்.சார்லஸ், மயிலை முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா, மறைமாவட்ட உதவி அதிபர் ஜோசப், ரெட்டிப்பாளையம் ஜார்ஜ், ஆனந்த பாக்கியராஜ், சகாயராஜ், செல்வராஜ், ஓரகடம் பங்குத் தந்தை வின்சென்ட் ராஜ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

மூன்றாம் நாளான சனிக்கிழமை படப்பை பங்குத் தந்தை பி.அம்புரோஸ், அருள்தல உதவி அதிபர்கள் ஜேக்கப், ராஜீ ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு செங்கை மறை மாவட்ட ஆயர் ஏ.நீதிநாதன் தலைமையில், 5 திருத் தேர்களின் ஆடம்பரப் பவனி நடைபெறுகிறது.

4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (4.10.15) காலை 5.30 மணிக்கு மழை மலை மாதா திருக்காட்சி மலையில் திருப்பலி நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு மழை மலை மாதா திருத்தேர் பவனியும், ஏழைகளுக்கு இலவசத் திருமணங்கள், திருவருள் சாதனங்கள் வழங்கல் நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம் நடைபெறுகிறது. செங்கல்பட்டு வழக்குரைஞர் எல்.யேசு மரியான் தலைமையில், திருவிழா நிறைவுத் திருப்பலி பூஜை நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் போன்றவை நடைபெறுகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா மறை மாவட்ட முதன்மை குரு மரிய ஜோசப் தலைமையில், எல்.தாஸ், ஜேக்கப், ராஜீ, அருள்சகோதரர் செபாஸ்டியன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.