மே-17ல் தன்வந்திரி பீடத்தில் மஹா ஹோமத்துடன் 108 கலச மூலிகை திருமஞ்சனம்  

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி மழை வேண்டி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன்....
மே-17ல் தன்வந்திரி பீடத்தில் மஹா ஹோமத்துடன் 108 கலச மூலிகை திருமஞ்சனம்  

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி மழை வேண்டி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 17.05.2017 புதன் கிழமை திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு 108 கலசங்களில் 108 விதமான மூலிகை தீர்த்தங்களைக் கொண்டு ஸ்ரீ மஹா தன்வந்திரி ஹோமம் செய்து மூலவர் தன்வந்திரிக்கு 108 கலச திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

மேலும் நல்லெண்ணெய் அபிஷேகம்: மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்திக்கும்,.தண்ணீர் அபிஷேகம்: மனசாந்தி ஏற்படவும்,.பஞ்சாமிர்த அபிஷேகம்: அனைத்து செல்வங்களும், தீர்காயுளும் கிடைக்கவும்,.பால் அபிஷேகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆயுள் விருத்தியும்  கிடைத்து. தோஷங்கள் நீங்கவும், .மஞ்சள் பொடி அபிஷேகம்: அனைவரும் நமக்கு உதவ முன்வரவும். ராஜவசியம்  ஏற்படவும், தயிர் அபிஷேகம்: குழந்தை பாக்கியம் உண்டாகவும்.. இளநீர் அபிஷேகம்: கஷ்டங்கள் நீங்கி .மன அமைதி, புத்தி தெளிவு ஏற்படவும், .கரும்புச்சாறு அபிஷேகம்: வியாதிகள் நீங்கி,,கல்வியிலும், சாஸ்திரங்களிலும் ஆர்வமும், திறமையும் உண்டாகவும்,.தேன் அபிஷேகம், குரல் இனிமை பெறவும், அரிசி மாவுப்பொடி அபிஷேகம்: லஷ்மி வாசம் உண்டாகவும், தாராளமாக பணம் புரளவும்,. கடன் தீரவும். சந்தன அபிஷேகம்: உடல் குளிர்ச்சி பெற்று மனதிற்கு அமைதி கிடைக்க வேண்டியும்,..சொர்ண அபிஷேகம்: செல்வங்கள் பெருகவும், நல்ல எதிர்காலத்தை அமைத்து நினைத்த நல்ல காரியங்கள் அனைத்தும் இனிதாக நடைபெற  வேண்டி மேற்கண்ட அபிஷேக திரவியங்கள் 108 கலச மூலிகை தீர்த்தங்களுடன் மூலவர் தன்வந்திரிக்கு அபிஷேகம் சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெற உள்ளது.

அபிஷேகம், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம். இறைவன் படைப்பது அனைத்தும் நமக்குதான். அவன் படைத்த பொருட்களை இறைவனுக்கு திரும்ப அவனிடமே நன்றி செலுத்தும் விதமாக நாம் இறைவனுக்கு அர்பணிக்கிறோம். குழந்தையை அழகாக சிங்காரித்து அழகு பார்ப்பதுபோல், இறைவனுக்கு அபிஷேகம் செய்து அழகு பார்க்கிறோம். இதனால் நம் மனம் குளிர்வதுபோல் இறைவனுடைய மனம் மகிழ்ச்சியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com