திருச்செந்தூரில் சைவ வேளாளர் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு முத்தாரம்மன் கோயில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, கும்ப பூஜை மற்றும் 1008 சங்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கும்பங்கள் விமான தளத்துக்கு கொண்டுவரப்பட்டு, விமான அபிஷேகம் நடைபெற்றது.





பின்னர் அம்மனுக்கு சங்கு அபிஷேகமாகி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஏற்பாடுகளை திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கத் தலைவர் க.சுப்பிரமணியன் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் சைவ வேளாளர் இளைஞர் பேரவையினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



