எதிர்பாராத பண வரவிற்கு சொல்ல வேண்டிய ரகசிய மந்திரம்

எதிர்பாராத பண வரவிற்கும், வரவேண்டிய பணம் நம்மை நோக்கி வருவதற்கும், தடைப்பட்ட....
எதிர்பாராத பண வரவிற்கு சொல்ல வேண்டிய ரகசிய மந்திரம்
Updated on
1 min read

எதிர்பாராத பண வரவிற்கும், வரவேண்டிய பணம் நம்மை நோக்கி வருவதற்கும், தடைப்பட்ட பணம் வராமல் சிக்கலில் இருந்தாலும், இந்த ரகசிய மந்திரத்தை நாம் பயன்படுத்தலாம்.

நீங்கள் கடினமாக உழைத்த பின்பும் உங்களுக்கு வரவேண்டிய நியாயமான பணம் வராமல் இருந்தால், உங்களைத் தேடி ஓடி நாடி வர நீங்கள் இந்த மந்திரத்தை ஜெபிக்கலாம்.

இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 3.30 - 4.30 மணிக்குள் வடக்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும்.

"ஓம் ரீங் வசி வசி 
தனம் பணம் தினம் தினம்"

இதை ஜெபிக்கும் போது முதுகுதண்டு, கழுத்து நேராக வைத்து உங்கள் ஆழ்மனதில் உறுதியாக நினைத்து ஜெபிக்க வேண்டும். எதிர்பாராத பண வரவு உங்களைத் தேடி வந்தே தீரும்.

நேர்மையாய், நியாயமாய் உங்களுக்கு சேர வேண்டிய செல்வம் உங்களை நோக்கி வர, இந்த மந்திரம் உங்கள் மனதை திறன்படுத்தி 100 சதவீதம் வழிநடத்தும் என்பது உறுதி.

மந்திரத்தை ஜெபித்த பின்பு பெரிய நெல்லிக்காய் அல்லது காய்ந்த நெல்லிக்காயை ஒரு கடி கடித்து விட வேண்டும். ஏனென்றால் நெல்லிக்கனியில் உள்ள ஆறுசுவையும் காரிய சித்தியடையதற்கும், வெற்றியடைவதற்கும் உதவும்.

வாழ்வில் எல்லா வளங்களும் உங்களை நோக்கி வர இந்த மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com