நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தால் இவ்வளவு பயனா? 

சைவத்தின் மாமந்திரம் நமசிவாய எனும் ஐந்தெழுக்கள் மட்டுமே. சிவ வழிபாட்டில் திருநீறும் ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக....
நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தால் இவ்வளவு பயனா? 
Published on
Updated on
1 min read

சைவத்தின் மாமந்திரம் நமசிவாய எனும் ஐந்தெழுக்கள் மட்டுமே. சிவ வழிபாட்டில் திருநீறும் ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க நமசிவாய எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது. 

நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். இதில் ‘ந’ என்பது திரோதான சக்தியையும், ‘ம’ என்பது ஆணவமலத்தையும், ‘சி’ என்பது சிவத்தையும், ‘வா’ என்பது திருவருள் சக்தியையும், ‘ய’ என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரம் நமசிவாய.

'நமசிவாய'  என்ற நாமம் உச்சரிக்க அமிர்த வச்சிரம் ஏற்படும்.

'நமசிவாய ஊம் நமசிவாய' என்று உச்சரித்தால் பதினெட்டு வகை சுரமும் தீரும்.

'நமசிவயங் செலகை நமசிவாய' என மந்திரம் உச்சரித்தால் அறுபத்து நான்கு பாஷாணங்களினால் ஏற்படும் விஷங்களும் தீரும்.

'நமசிவாயம் லங்க நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தால் பூமியில் மழை பொழியும்.

'சவ்வும் நமசிவாய நமா' என்று உச்சரித்தால் அரச போகம் கிட்டும்.

'ஶ்ரீயும் நமசிவாய நமா' என்ற மந்திரத்தை ஓதினால் கள்ளர்கள் வரமாட்டார்கள்.

'ஊங்கிறியும் நமசிவாய நமா' என்ற மந்திரத்தைச் சொன்னால் மோட்சம் கிடைக்கும்.

'அலங்கே நமசிவாய நமோ' என்ற மந்திரத்தைச் சொன்னால் புகழ் மற்றும் பெருமை உண்டாகும்.

'வநம சிவாய' என்று செபித்தால் தேக சித்தி உண்டாகும்.

'ஓம் நமசிவாய' என்று செபித்தால் காலனை வெல்லலாம்.

'லங்கிரியும் நமசிவாய' என்று உச்சரித்தால் தானியங்கள் பெருகி வளரும்.

'ஓங்கிறியும் ஓம் நமசிவாய' என்று சொல்லி வந்தால் வாணிபங்கள் நன்றாய் நடக்கும். 'ஓங் ஊங் சிவாய நம உங்நமா' என்ற மந்திரத்தை உச்சரித்தால் பதினெட்டு வகையான குட்டமும் தீரும்.

'லீங் க்ஷும் சிவாயநம' என்ற மந்திரம் உச்சரித்தால் பெண்கள் வசியம் ஏற்படும்.

'லூங் ஓங் நமசிவாய' என்று ஓதினால் தலையில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தீரும்.

'ஓங் அங்கிஷ சிவாய நம' என்று ஓதினால் பூமியெங்கும் சஞ்சாரம் செய்யலாம்.

'அங் சிவாய நம' என்று உச்சரித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

'அங் உங் வங் சிவாய நம' என மந்திரம் உச்சரிக்க உடலில் உண்டான நோய்கள் தீரும்.

'ஹம் ஹம் சிவாய நம' என்று உச்சரித்தால் யோக சித்தி உண்டாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com