திருப்பதிக்கு செல்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனங்கள்..


ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தகவல்கள் தெரிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி ஆகியவற்றை முன்னிட்டு, வழக்கமாக ஏழுமலையின் கோயிலில் மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு தரிசனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால், இந்தாண்டு சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏராளமானோர் வருவார்கள் என்பதால் தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, திருமலையில் வரும் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பா் 30, 31, ஜனவரி 1 மற்றும் ஜனவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் தேவஸ்தானம் அளித்து வரும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அந்த நாள்களில் வாடகை அறை முன்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், சூரிய கிரஹணத்தை முன்னிட்டு டிசம்பா் 25-ஆம் தேதி இரவு 11 மணி முதல் 26-ஆம் தேதி மதியம் 12 மணிவரை ஏழுமலையான் கோயில் மூடப்பட உள்ளது. 26-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
சூரிய கிரஹணத்தை முன்னிட்டு அன்னதானக் கூடமும் மூடப்படுவதால் அந்நாள்களில் அன்னதானமும் ரத்து செய்யப்படும் என்று திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...