மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

பகல் பத்து 6 ஆம் திருநாள்: பாண்டியன் கொண்டையில் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 6 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநம்பெருமாள் பாண்டியன் கொண்டையில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்.

News image

பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்.

Updated On :21 டிசம்பர் 2020, 6:50 am

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 6 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநம்பெருமாள் பாண்டியன் கொண்டையில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்.

பகல்பத்து விழாவில் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதிப்பாா்.

Story image

பகல் பத்து 6 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 6.30-க்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் பாண்டியன்  கொண்டை, ரத்தி அபயஹஸ்தம், ரத்தினகிளி, மார்பில் லட்சுமி பதக்கம், புஜகீர்த்தி முத்துச்சரம் , பவள மாலை , காசு மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்களுடன் புறப்பட்டு 7 மணிக்கு பகல் பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா். 

Story image

தொடா்ந்து காலை 8 மணி முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படு ஏராளமான பக்தா்கள் வரிசையில் நின்று தரிசித்து வருகின்றனர்.

Story image

இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நம்பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். 

Story image

பிறகு இரவு 9 மணிக்கு அா்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு கருவறை சென்றடைகிறார் நம்பெருமாள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.