மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

பகல் பத்து 9 -ஆம் திருநாள்:  முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 9 ஆம் நாளான புதன்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

News image

வைகுந்த ஏகாதசி பகல்பத்து 9-ஆம் நாளான புதன்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.

Updated On :23 டிசம்பர் 2020, 4:35 am

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 9 ஆம் நாளான புதன்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

Story image

விழாவையொட்டி காலை 6.30-க்கு முத்துக்குறி திரு ஆபரணங்களை சூடியபடி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள், பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் 7 மணிக்கு எழுந்தருளினாா். 

Story image

அங்கு அலங்காரம், அமுது செய்யத் திரையிடப்பட்டு காலை 8 மணி முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று முகக் கவசம், சமூக இடைவெளியுடன் நம்பெருமாளைத் தரிசித்து வருகின்றனர். இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. 

Story image
Story image

வைகுந்த ஏகாதசி பகல்பத்து 9-ஆம் நாளான புதன்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.