11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்! வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்!

காரைக்குடியில் விஜய் பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்...

News image

விஜய் - TVK

Updated On :10 ஏப்ரல் 2026, 2:52 pm IST

காரைக்குடிக்கு பிரசாரத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசாமல் சென்றதால் வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழ்நாடு சட்டபேரவைத் தோ்தலையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம் அருகே தவெக தலைவா் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் சென்ற விஜய், அங்கிருந்து பிரசார வாகனம் மூலம் காரைக்குடிக்கு சென்றார்.

ஆனால், வழிநெடுங்கிலும் தவெக தொண்டர்களும் ரசிகர்களும் குவிந்திருக்கும் நிலையில், பிரசார வாகனத்தின் மேலே நின்றபடி 4 மணிநேரத்துக்கு மேலாக விஜய் சாலைவலம் மேற்கொண்டார்.

இதனால், பிரசாரத்துக்காக தேர்தல் ஆணையம் வழங்கிய பகல் 12 முதல் 2.30 மணிக்குள் விஜய்யால் வர முடியவில்லை.

பிரசாரத்துக்கு அனுமதி பெறப்பட்ட திடலுக்கு பிற்பகல் 2.40 மணியளவில் வந்த விஜய், காரைக்குடி வேட்பாளர் பிரபுவை மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு பேசாமல் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

இதனால், பிரசாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் காலை முதல் வெய்யிலில் காத்திருந்த தொண்டர்களும் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

Summary

Vijay Leaves Karaikudi Without Speaking! Supporters Who Waited in the Scorching Sun Are Disappointed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.