தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்ற நிலையில், வெற்றி சான்றிதழ் வாங்க வந்த அக்கட்சியின் தலைவர் விஜய், தன்னை நம்பி வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி என்று மைக்கைப் பிடித்து சொல்லுவார் என எதிர்பார்த்த வாக்காளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்தே தவெக முன்னிலை வகிக்கத் தொடங்கிவிட்டது. அவர் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்க்க அவரது நலம் விரும்பிகள் சிலரும் வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். காலையில் இருந்து மதியம் வரை வெளியே வராத விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றிச் சான்றிதழ் பெற நீலாங்கரை வீட்டிலிருந்து வெளியே வந்தார். அவர் அங்கிருந்து நேராக அடையாறு சென்று பெற்றோரிடம் ஆசி பெற்றுக் கொண்டு நுங்கம்பாக்கம் சென்று வெற்றி சான்றிதழ் பெற்றுக் கொண்டு திரும்பினார்.
பெற்றோர் வீட்டுக்கு வந்த போது, அந்த வீட்டைச் சுற்றி ஏராளமான அவரது ரசிகர்கள் குவிந்திருந்தனர். அவர்களை நோக்கி மிக மகிழ்ச்சியோடு அவர் கையசைத்தார்.
பிறகு மீண்டும் காரில் ஏறி நுங்கம்பாக்கம் சென்றார். வழிநெடுகிடும் விஜய் ஆதரவாளர்களும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நுங்கம்பாக்கத்திலும் செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். விஜய் ஏதேனும் பேசுவார் என்று காத்திருந்தனர். விஜய்க்கு வாக்களித்தவர்களும் விஜய், தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், எங்குமே அவர் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார்.
இதனால் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி என்று விஜய் சொல்வார் என மிகுந்த ஆவலோடு காத்திருந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
அதேவேளையில், சமூக வலைத்தளப் பக்கத்திலாவது அந்த ஒற்றைச் சொல்லை அவர் பதிவிட்டிருக்கலாம் என்றும் சிலர் தங்களது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
தவெக இந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். திடீரென எதிர்பாராத வெற்றியால் தவெக தலைவர் விஜய் நிச்சயம் ஆனந்த ஆதிர்ச்சியில் உறைந்திருப்பார். அதனால்தான் அவர் என்ன பேசுவது என்று தெரியாமல் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றிருக்கலாம் என்றும் அவரது உண்மையான ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
பக்காவாக வந்து அவர் தன்னுடைய வாக்காளர்களுக்கு நன்றி சொல்வார் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக அரசை 144 பேர் ஆதரித்தது எப்படி? எதிர்த்தவர்கள் யார்?
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு!
மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகளுக்கு விஜய் நேரில் நன்றி
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவிக்கிறார் விஜய்!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
