மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது பஞ்சாலைப் பேருந்து மோதி பெண் பலி

அருப்புக்கோட்டை அருகே ஜெயராம் நகரில் சனிக்கிழமை பிற்பகல் இரு சக்கர வாகனத்துடன் தனியார் பஞ்சாலைப் பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News image
தனியார் பஞ்சாலைப் பேருந்தில் சிக்கி பலியான பெண்
Updated On :4 ஜூலை 2020, 1:12 pm

தினமணி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஜெயராம் நகரில் சனிக்கிழமை பிற்பகல் இரு சக்கர வாகனத்துடன் தனியார் பஞ்சாலைப் பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அருப்புக்கோட்டை காந்தி நகரில் வசிப்பவர் சீனி பாக்கியம். இவர் சனிக்கிழமை பிற்பகல் காந்தி நகரை அடுத்துள்ள ஜெயராம் நகரருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது சுமார் 4 மணியளவில் சாலை வளைவில் எதிரே வந்த தனியார் பஞ்சாலைப் பேருந்து மீது மோதியதில் அப்பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பலியானார். 

இதுகுறித்து வழக்குப் பதிந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் விபத்து நடந்த விதம் குறித்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் ஒட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.